கோவை: பொறுப்பற்று செயல் படுகிறதா மாநகராட்சி..? எச். ராஜா குற்றச்சாட்டு

66பார்த்தது
கோவையில் நேற்று(பிப் 9) நலம் இலவச மருத்துவ முகாம் ராமநாதபுரம் பகுதியில் லட்சுமி நாராயணன் தேக பயிற்சி சாலையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜவால் துவங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எச். ராஜா செய்தியாளர்களிடம் பேசும் போது, சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்னரே வானதி இது போன்ற சேவைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், பாரதிய ஜனதா இது போன்ற முகாம்களை மகளிர் அணி தலைவி சட்டமன்ற உறுப்பினர் ஆனதற்குப் பிறகும் அவர் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார், அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  

கோவை பகுதியில் நகராட்சிகளில், ஒருபுறம் சாலை அமைத்துக் கொண்டு போனால், ஒருபுறம் வடிகால் அமைப்பவர்கள் தோன்றுகிறார்கள், அந்தப் பணிகள் முடிந்ததும் குடிநீர் குழாய்க்கு குழிகள் தோண்டப்படுகிறது. அநாதை குழந்தை மன நிலைமையில் கோவை மாநகராட்சியின் நிர்வாகம், பொறுப்பற்ற நிர்வாகமாக செயல்படுகிறது. 

அதேபோல இன்று(பிப் 9) காலையில் கூட நான் ஒரு மருத்துவரை சந்தித்தேன், 2004-ல் அவருக்கு விதிக்கப்பட்ட வீட்டு வரி 2400 ரூபாய், ஆனால் இன்று அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நோட்டீஸில் 56000 ரூபாய் கட்ட வேண்டும் என்று வந்திருக்கிறது. இதுபோன்று அனைத்து வீடுகளுக்கும் நோட்டிஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சாடினார்.

தொடர்புடைய செய்தி