தேர்தல் விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது

68பார்த்தது
100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி MK அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது

பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு கோவை பாராளுமன்ற தொகுதியில் 100% ஓட்டுப்பதிவு நிகழ வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோவையில் உள்ள பிரபல தொழில் குழுமமான MK குழுமத்தின் கீழ் செயல்படும் MK அறக்கட்டளை சார்பில் 'வாக்காளர் விழிப்புணர்வு வாகன பேரணி' இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் செல்வ சுரப்பி கலந்து கொண்டு MK குழுமத்தின் தலைவர் M. V. மணிகண்டன் அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.

கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பேரணியில் 250 வாகன ஓட்டிகள் மற்றும் அவர்களுடன் பங்கேற்றவர்கள் என மொத்தம் 500 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, அவிநாசி சாலையில் அமைந்துள்ள LIC அலுவலகம் வழியே சென்று, Huzur ரோடு, ரேஸ் கோர்ஸ் வரை சென்று அங்கிருந்து மீண்டும் அதே வழியில் நேரு விளையாட்டு அரங்கத்திற்கு திரும்பினர்.

தொடர்புடைய செய்தி