சிறப்பு பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு கூடிய கட்டிடம்

76பார்த்தது
சிறப்பு பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு கூடிய கட்டிடம்
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரூ. 1. 29 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு பிரிவுடன் கூடிய கட்டிடம் மற்றும் உபகரணங்கள், ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் காரமடை வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம் மற்றும் ரூ. 22. 75 லட்சம் மதிப்பீட்டில் இரட்டை வகை செவிலியர் குடியிருப்பு கட்டிடங்களை நேற்று மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜசேகரன் வரவேற்புரை ஆற்றினார். கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையுரை ஆற்றினார். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குநர் கிருஷ்ணா திட்ட விளக்கவுரை ஆற்றினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி