கபில் சிபலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

60பார்த்தது
கபில் சிபலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், கபில் சிபலின் வெற்றி வழக்கறிஞர்கள் சங்கம் சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்யும். மக்கள் போற்றும் நீதி மற்றும் ஜனநாயகக் கொள்கைகள் கபில் சிபலின் தலைமையில் நிலை நிறுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.