கழிவுநீர் குழாயில் வடிகட்டி அமைக்காததால் வாரியம் திணறல்

67பார்த்தது
கழிவுநீர் குழாயில் வடிகட்டி அமைக்காததால் வாரியம் திணறல்
சென்னையில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காணாமல் இருப்பதற்கு, அடுக்குமாடி மற்றும் வணிகம் சார்ந்த கட்டடங்களில் உள்ள கழிவுநீர் இணைப்புகளில், 'சேம்பர்' என்ற வடிகட்டி அமைக்காதது முக்கிய காரணம் என்பது தெரிய வந்துள்ளது. வடிகட்டி அமைக்காத கட்டடங்கள் மீது, அபராதம் விதிப்பு நடவடிக்கை எடுக்க முடியாததால், புதிதாக சட்டம் இயற்ற, வாரிய அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

சென்னை குடிநீர் வாரியத்தில், 13. 35 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. தினமும், 106 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. இதில், 70 கோடி லிட்டர் கழிவுநீராக வெளியேறுகிறது.

இந்த கழிவுநீர், 321 உந்து நிலையங்களில் சேர்ந்து, அங்கிருந்து 21 இடங்களில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. இதில், இரண்டு மற்றும் மூன்றாம் நிலைகளில் சுத்திகரிக்கும் நீரை, தொழிற்சாலைகளுக்கு வழங்குவதுடன், ஏரியில் விடப்படுகிறது; மீதமுள்ள நீர் கடலில் விடப்படுகிறது. இதற்காக, 5, 500 கி. மீ. , நீளத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இந்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை அகற்ற, 1. 35 லட்சம் இயந்திர நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழாயில் அடைப்பு ஏற்படாமல், நீரோட்டம் சீராக இருந்தால் தான் கழிவுநீர் பிரச்னை ஏற்படாது.

ஆனால், குடிநீர் வாரியத்தில் கழிவுநீர் பிரச்னை என, தினமும் 500க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகின்றன.

தொடர்புடைய செய்தி