மடிப்பாக்கம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் புரோக்கர் தனது கூட்டாளியுடன் போலீசார் கைது செய்தனர்.
மடிப்பாக்கம் ராமலிங்கா தெருவில் உள்ள வீட்டிற்கு இரவு நேரங்களில் சந்தேக நபர்கள் அதிகளவில் வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் விபசார தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் அளித்தனர். அந்த தகவலின்படி விபசார தடுப்பு பிரிவு- 2 இன்ஸ்பெக்டர் தலைமையிலான பெண் காவலர்கள் நேற்று முன்தினம் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அந்த வீட்டிற்கு வந்து சென்றது உறுதியானது. அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் அதிரடியாக அந்த வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தினர்.
அப்போது சைதாப்பேட்டை ஜோதியம்மாள் நகரை சேர்ந்த பிரபல பாலியல் புரோக்கர் பூர்ணிமா (எ)(35) தனது கூட்டாளியான நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த ரவி என்பவர் உதவியுடன் வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஏற்கனவே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த பெண் புரோக்கர் பூர்ணிமா (எ) ஜான்சி மற்றும் ரவியை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வடமாநில பெண் உள்பட 3 இளம்பெண்களை மீட்கப்பட்டனர். மேலும், பாலியல் தொழிலுக்கு வாடிக்கையாளர்களுக்கு புகைப்படம் மற்றும் தொடர்புகொள்ள பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.