மனைவி சைரா பானு உடனான விவகாரத்து தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், '30வது ஆண்டில் அடியெடுத்து வைப்போம் என்று நம்பியிருந்தோம். ஆனால் எதிர்பாராத முடிவுக்கு வந்திருக்கிறோம். கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். உடைந்த துண்டுகள் சேராது என்ற போதும் அதற்கான அர்த்தம் தேட விரும்புகிறோம். இந்த பலவீனமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும்போது தனியுரிமைக்கு மதிப்பளித்ததற்கு நன்றி' என குறிப்பிட்டுள்ளார்.