மார்ச் 1ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும் இந்த பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் INDIA கூட்டணி தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்குள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்து அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.