நிதி நிறுவன மோசடி; தேவநாதன் யாதவ் மீது குவியும் புகார்கள்

75பார்த்தது
நிதி நிறுவன மோசடி; தேவநாதன் யாதவ் மீது குவியும் புகார்கள்
சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து பர்மனென்ட் ஃபண்ட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத் தொகை வைத்திருந்தனர்.

இந்நிலையில், அந்த நிறுவனத்தில் ரூ. 24. 5 கோடி மோசடி நடந்ததாக, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அந்த நிதி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்த இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன், மகிமைநாதன் ஆகிய 3 பேரையும் கடந்த மாதம் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், பணம் கட்டி ஏமாந்த வாடிக்கையாளர்களின் புகார்களை நேரடியாக பெரும் வகையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் மயிலாப்பூரில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்துள்ளனர். 2 நாட்களாக நடைபெற்று வரும் அந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் நிதி நிறுவனத்தில் கட்டிய ஆவணங்கள், ரசீது உள்ளிட்டவற்றின் நகலை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் அளித்து வருகின்றனர். தற்போது வரை 3, 814 புகார்கள் வந்துள்தளாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி