வடசென்னையில் இளைஞர்கள் சிலர் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி அதனால் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவங்கள் நடந்தன.
இதையடுத்து தொடர்ந்து போலீசார் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தும் நபர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் குறிப்பிட்ட மாத்திரைகளை மருத்துவர் ஒப்புதல் சீட்டு இல்லாமல் தரக்கூடாது என மருந்தகங்களிலும் போலீசார் அறிவுறுத்தி வந்தனர். இதனால் சென்னையில் வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
எனவே, அதனை வாங்கி விற்பனை செய்பவர்கள் ஆன்லைன் மூலமாகவும் மேலும் வடமாநிலங்களுக்கு ரயில் மூலமாக சென்று அங்கு மாத்திரைகளை வாங்கி வந்து விற்பனை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. அந்த வகையில், சென்னையை சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் மும்பைக்குச் சென்று வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வரும்போது காவல்துறையிடம் வசமாக பிடிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.