மைலாப்பூர் - Mylapore

சென்னை: நீதிபதி மகனை தாக்கிய நடிகர் தர்ஷன்; காவல்துறையினர் விசாரணை

சென்னை: நீதிபதி மகனை தாக்கிய நடிகர் தர்ஷன்; காவல்துறையினர் விசாரணை

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தர்ஷன். அதனைத் தொடர்ந்து கே. எஸ். ரவிக்குமார் தயாரித்த கூகுள் குட்டப்பா என்ற படத்தின் மூலம் நாயகனாக நடித்திருந்தார். தர்ஷன் குடியிருக்கும் வீட்டில் அருகே காரை பார்க்கிங் செய்வது தொடர்பாக நீதிபதி மகனுக்கும் தர்ஷனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  இந்த மோதலில் ஒரு பெண் மற்றும் நீதிபதியின் மகன் காயமடைந்த நிலையில், இருவரும் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தர்ஷன் தனது நண்பர்களுடன் சேர்த்து தன்னை தாக்கியதாக நீதிபதியின் மகன் ஜே. ஜே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், நடிகர் தர்ஷனும் தனது தரப்பில் இருந்து புகார் அளித்துள்ளார்.  இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டுக்கு முன் காரை நிறுத்தியதால், காரை எடுக்க சொன்னபோது தனது தம்பியை தாக்கியவிட்டதாக தர்ஷனும், நாங்கள் காரை எடுக்க சென்றபோது, அவர்கள் தங்களை தாழ்வாக பேசினார்கள் என்று நீதிபதியின் மகனும் கூறியிருப்பதால், இந்த நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


சென்னை