நடிகை த்ரிஷா பற்றி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ. வி. ராஜூ அவதூறாக பேசியதற்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். தங்களை இந்த உலகத்துக்கு கொண்டுவந்த பெண்களை இழிவாக பேசுகின்றனர் என்று வருத்தம் தெரிவித்தார். மேலும், பெண்களை துஷ்பிரயோகம் செய்ய நினைப்பவர்கள் அவதூறாக பேசுவதாக கூறிய அவர், ஏ. வி. ராஜூ பேச்சு பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது என்று கடுமையாக சாடினார்.