பள்ளத்தில் சிக்கிய காரால் பரபரப்பு..!

71பார்த்தது
பள்ளத்தில் சிக்கிய காரால் பரபரப்பு..!
சென்னை கொரட்டூர் கிழக்கு அவென்யு சாலையில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் கார் சிக்கி விபத்துக்குள்ளானது. சென்னை கொரட்டூர் கிழக்கு அவென்யூ சாலையில் நேற்று காலை பாஸ்கர் என்பவர் தனது டிராவல்ஸ் காரை ஓட்டி வந்தார். அப்போது சாலையில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் அவரது கார் சிக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கர், காரை விட்டு இறங்கி வெளியில் வந்து கூச்சலிட்டார். இதனால் அவ்வழியே வந்த மற்ற வாகன ஓட்டிகள், பாஸ்கரின் கார் பள்ளத்தில் விழாமல் இருக்க கொம்புகளை வைத்து முட்டுக் கொடுத்தனர். தகவலறிந்த அம்பத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை தடைசெய்து மாற்று வழி ஏற்படுத்திக் கொடுத்தார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, கிரேன் மூலம் காரை அகற்றி, பள்ளத்தை மூடி சாலையை சரி செய்தனர். போக்குவரத்து அதிகம் உள்ள பரபரப்பான சாலையில் திடீரென 6 அடி அகலம் 4 அடி ஆழம் கொண்ட பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பள்ளத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி