2024 - 2025ஆம் கல்வியாண்டுக்கான நாட்காட்டியை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு 220 நாள்கள் பள்ளிகள் செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக 210 நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் நிலையில் அரசின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பெரும்பாலான சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.