யூடியூப்பில் அவதூறு கருத்து: நடிகர் நகுல் புகார்

60பார்த்தது
யூடியூப்பில் அவதூறு கருத்து: நடிகர் நகுல் புகார்
தன்னை பற்றியும் தன்னுடன் பணியாற்றிய நபர்களை பற்றியும் அவதூறாக யூடியூப் சேனலில் பேசி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் நகுல் ஜெய்தேவ் புகார் அளித்துள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் நகுல் ஜெய்தேவ் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். சமீபத்தில் ‘‘வாஸ்கோடகாமா” என்ற திரைப்படத்தில் தான் நடித்துள்ளதோடு அந்த திரைப்படத்தில், அலுவலக பணியாளராக தன்னுடன் பணியாற்றிய ‘சந்துரு’ என்பவர் தன்னைப் பற்றியும் திரைப்பட இயக்குனர் ஆர்ஜிகே மற்றும் உடன் இணைந்து பணியாற்றிய நடிகைகள் அர்த்தனா மற்றும் சுனைனா ஆகியோரை பற்றி அநாகரிகமாகவும், தவறாகவும் சமூக வலைதளமான யூடியூப்பில் பேசி பேட்டி அளித்துள்ளார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே எந்தவித அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் தொடர்ந்து இழிவாக பேசி வரும் சந்துரு மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, யூடியூப் சேனலில் உள்ள அந்த காணொலியை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி