திருவண்ணாமலை கோயில் கோபுரம் முன் வணிக வளாகம்: ஐகோர்ட் ஆணை

84பார்த்தது
திருவண்ணாமலை கோயில் கோபுரம் முன் வணிக வளாகம்: ஐகோர்ட் ஆணை
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கிழக்கு கோபுரம் முன்பு ரூ. 6 கோடி செலவில் வணிக வளாகம் கட்ட அறநிலையத்துறை அனுமதியளித்து கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி கோயில் வழிபாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் டி. ஆர். ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று(செப்.12) விசாரணைக்கு வந்தது. அப்போது, வணிக வளாகம் கட்டுமானம் தொடர்பான வரைபடங்களை பார்வையிட்ட நீதிபதிகள், கோயில் முன்பு திறந்த வெளியில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வணிக வளாகம் கட்டுவது அவசியம் தானா? என கேள்வி எழுப்பினர். மேலும், ராஜகோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது? என்று விளக்கம் அளிக்கும்படி அறநிலைய துறை தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்தி