அண்ணா நகர் - Anna nagar

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை வாரஇறுதி நாள் மற்றும் பௌர்ணமி ஆகியவற்றை முன்னிட்டு பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர்.  பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் அதிக அளவில் திரண்டனர். இதனால், தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய பேருந்துகளும், சென்னை மாநகர மற்றும் புறநகர பேருந்துகள் என அனைத்து பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் என அறிவிக்கப்பட்டு திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டது.  மேலும் சிறப்பு பேருந்துகள் என அறிவிக்கப்பட்ட பேருந்துகளில் கூடுதல் கட்டணங்களும் வசூலிக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தென் மாவட்ட பேருந்துகளும், நகர்புற பேருந்துகளும் குறைக்கப்பட்டன. இதனால் வாரவிடுமுறையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் கடுமையான இன்னலுக்கு ஆளாகினர்.  மேலும் திருவண்ணாமலைக்கு தேவையான கூடுதல் பேருந்துகளும் போதுமான அளவு இயக்கப்படவில்லை என்பதால் மக்கள் கடுமையான அவதிக்குள்ளாகினர். மேலும் கூட்டநெரிசல் காரணமாக பொதுமக்கள் திருவண்ணாமலைக்கு செல்லும் அனைத்து பேருந்துகளிலும் முண்டியடித்துக்கொண்டு ஏறிச் சென்றனர்.

வீடியோஸ்


சென்னை