பெங்களூரில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் எச்டி குமாரசாமி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. இதனை கவனித்த அவர் கைக்குட்டையில் ரத்தத்தை துடைத்தார். தொடர்ந்து இதனைப் பார்த்த உடன் இருந்தவர்கள் அவரை அங்கிருந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக மத்திய அமைச்சர் எச்டி குமாரசாமி ஓய்வெடுக்க அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற நிலையில் கதவுக்கு பூட்டுப்போடப்பட்டு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.