மத்திய அரசு 30%, தமிழ்நாடு அரசு 70% பணம் தருகிறது: விளக்கம்

74பார்த்தது
மத்திய அரசு 30%, தமிழ்நாடு அரசு 70% பணம் தருகிறது: விளக்கம்
மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசின் பெயர்கள்’ - என்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் 1.2 லட்சம் வழங்கும் திட்டமாகும். இதில், 72,000 மத்திய அரசும், ரூ.48,000 தமிழ்நாடு அரசு வழங்குகிறது. மத்திய அரசு வழங்கும் தொகை போதாது என்பதால் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு கூடுதலாக ரூ.1,20000 வழங்கப்படுகிறது. மொத்தம் திட்டத்தில் ரூ.2,40,000 பயனாளிக்கு வழங்கப்படுகிறது. மேற்கண்ட 2.4 லட்சத்தில் தமிழ்நாடு அரசு 70% பணத்தையும், மத்திய அரசு 30% அத்தை மட்டுமே தருகிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி