நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

69பார்த்தது
நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை (ஜுன் 19) நடைபெறுகிறது. கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படும். மக்களவை சபாநாயகர், துணை சபாநாயகர்கள் நியமனம், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் முக்கிய பிரச்னைகள், மசோதாக்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. 3ஆம் மோடி அரசு பொறுப்பெற்று ஒருவாரம் கடந்துள்ள நிலையில், நீட் தேர்வு, ரயில் விபத்து, மணிப்பூர் விவகாரங்கள் சவால்களை ஏற்படுத்தி வருகின்றன.