கண்டியபேரி நெல்லை அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் அபாயகரமான மருத்துவ கழிவுகளை கொட்டிய விவகாரம் தொடர்பாக நெல்லை டவுன் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அபாயகரமான மருத்துவ கழிவுகளை அஜாக்கிரதையாக கொட்டியது உள்ளிட்ட 2 பிரிவுகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவக்கழிவு கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக மருத்துவமனை தரப்பிலும், துறை ரீதியிலும் விசாரிக்கப்படுகிறது.