சாலையில் சென்றவர்களை இடித்து தூக்கிய கார் (வீடியோ)

60பார்த்தது
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் கடந்த மே 31ஆம் தேதி ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. சாலையில் மூவர் பேசிக் கொண்டு நடந்து சென்றபோது மின்னல் வேகத்தில் வந்த கார் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. விபத்தில் காயமடைந்த மூவரும் பலத்த காயமடைந்தனர். சாலையில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.