தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்லும் நிலையில் தங்க நகைகளை வாங்கலாமா என்கிற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. தங்க நகைகளை தாராளமாக வாங்கலாம் என முதலீட்டு ஆலோசகர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் தங்கத்தின் விலை குறையப்போவதில்லை. மேலும் உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் தான் அதிகமாக இருக்கிறது. 2026-க்கு பின்னர் தான் ஒரு சீரான நிலை ஏற்படும். அப்போது கூட விலை குறையாது. ஏற்ற இறக்கம் தான் இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.