வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டரான டுவைன் பிராவோ(40) அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனிடையே அடுத்தாண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக பிராவோ செயல்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2011ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த பிராவோ, கடந்த 2 ஆண்டுகளாக அந்த அணியின் பவுலிங் கோச்சாக இருந்தார். தற்போது அந்தப் பதவியிலிருந்து அவர் விலக உள்ளார்.