விமானத்தில் குடும்ப உறுப்பினரை தாக்கிய சிறுவன்

64பார்த்தது
விமானத்தில் குடும்ப உறுப்பினரை தாக்கிய சிறுவன்
சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், கனடாவின் டொராண்டோவில் இருந்து கால்கரி நோக்கி சென்ற ஏர் கனடா விமானத்தில் தனது குடும்ப உறுப்பினர் ஒருவரை 16 வயது சிறுவன் தாக்கியுள்ளார். இதனால் விமானம் திட்டமிடப்படாத மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது. மேலும் சிறுவனால் தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த விமான நிறுவனம், சிறுவன் எதற்காக தாக்கினான் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை என தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்த விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி