தமிழர்களை மோசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட பாஜக.?

58பார்த்தது
ஒடிசாவில் நவீன் பட்டநாயக்கின் உதவியாளராக இருக்கும் தமிழரான பிகே பாண்டியன் குறித்து மோடி பேசியது சர்ச்சையை கிளப்பியிருந்தது. ஒட்டுமொத்த தமிழர்களையும் அவர் தாக்கி இருந்ததாக கண்டனங்கள் எழுந்த நிலையில், தமிழர்களை அவமதிக்கும் வகையில் ஒடிசாவின் பாஜகவினர் சில வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். அதில் பழைய சாதத்தை இலையில் ஊற்றி பிகே பாண்டியன் சாப்பிடுவது போல வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.