ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் கைது

68பார்த்தது
ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் கைது
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் தொடர்பாக ஆபாச வீடியோ உள்ளதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், வினோத், விக்னேஷ், ஸ்ரீநிவாஸ், தனியார் பள்ளி தாளாளர் குடியரசு உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மயிலாடுதுறை பாஜக மாவட்டத் தலைவர் அகோரம், தனிப்படை போலீசாரால் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you