ஹரியானாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி

85பார்த்தது
ஹரியானாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி
ஹரியானா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் நயப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட காரணங்களால் அங்கு ஆட்சியில் இருந்த பாஜக - ஜேஜேபி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. பாஜக முதல்வர் லால் கட்டார், அமைச்சர்களுடன் பதவி விலகியதை அடுத்து ஆட்சி கவிழ்ந்தது. பின்பு புதிய முதல்வராக நயப் சிங் சைனி பொறுப்பேற்றுக்கொண்டார்.