பிக்பாஸ்-ல் இருந்து வெளியேறினார் பவா செல்லதுரை

1574பார்த்தது
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எழுத்தாளர் பவா செல்லதுரை வெளியேறினார். தன்னால் இதற்குமேல் ஒரு நாள் கூட உள்ளே இருக்க முடியாது எனக் கூறி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார் அவர். 100 நாட்கள் நடைபெறும் பிக்பாஸ் விளையாட்டில் நடப்பு சீசனில் இருந்து 7வது நாளிலேயே வெளியேறினார். அனன்யா எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், தானாக முன்வந்து தற்போது பவா செல்லதுரை வெளியேறி உள்ளார். சமீபத்தில் படிப்பு தேவையில்லை என்பது போல் இவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.