நியூசிலாந்து மண்ணில் வரலாறு படைத்த வங்கதேச அணி!

58பார்த்தது
நியூசிலாந்து மண்ணில் வரலாறு படைத்த வங்கதேச அணி!
நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதில் நியூசிலாந்து அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 31.4 ஓவர்களில் 98 ரன்களில் ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி நிதானமாக ஆடி ரன்களை குவித்தது. இந்நிலையில் 15.1 ஓவரில் 99 ரன்கள் எடுத்து நியூசிலாந்து மண்ணில் அந்த அணியை முதல் முறையாக ஒருநாள் போட்டியில் வீழ்த்தி வரலாறு படைத்தது வங்கதேச அணி.

தொடர்புடைய செய்தி