இறைச்சி உணவுகளை விற்க தடை - சொமாட்டோ விளக்கம்!

85பார்த்தது
இறைச்சி உணவுகளை விற்க தடை - சொமாட்டோ விளக்கம்!
உணவு விநியோக செயலியான Zomato, அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை விழா நாளில் வட மாநிலங்களில் இறைச்சி உணவுகளை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இறைச்சி உணவுகள் வழங்கப்படவில்லை என வாடிக்கையாளர்கள் பலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து தங்களுக்கு இறைச்சி உணவுகளை வினியோகம் செய்யக்கூடாது என நோட்டீஸ் வந்துள்ளதாக சமூக ஊடகங்கள் மூலம் Zomato தெரிவித்துள்ளது. தேசிய உணவக சங்கத்தின் தலைவர் வருண் கேரா, ஜனவரி 22ஆம் தேதி உத்தரபிரதேசத்தில் உள்ள உணவகங்களில் சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். பல மாநிலங்களில் இறைச்சிக் கடைகள் அன்று மூடப்பட்டன.

தொடர்புடைய செய்தி