குடிநீர் கேட்டு சாலை மறியல்: ஆத்திரமடைந்த மக்கள்

79பார்த்தது
குடிநீர் கேட்டு சாலை மறியல்: ஆத்திரமடைந்த மக்கள்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ளது சாத்தம்பாடி ஊராட்சி இங்குள்ள தெற்கு காலனி தெருவில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை அரியலூர் -ஸ்ரீ புரந்தான் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்பு. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார் மற்றும் தா. பழூர வட்டார வளர்ச்சி அலுவலர் பொய்யா மொழி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்இதனையடுத்துபொதுமக்களுக்கு உடனடியாக தண்ணீர் விநியோகிக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் அரியலூர் ஸ்ரீ புரந்தான் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி