காசோலை மோசடி; ஆசிரியருக்கு 6 மாதம் சிறை

2620பார்த்தது
காசோலை மோசடி; ஆசிரியருக்கு 6 மாதம் சிறை
பெரம்பலூர் நொச்சியம் கிராமம், தெற்குத்தெருவில் வசிப்பவர் மருதநாயகம், இவரது மகன் ராபர்ட் இங்கர்சால் (48), விவசாயி. இவருக்கும் எறையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கணேசன் (54) என்பவருக்கும் நட்பு இருந்துள்ளது. கணேசன் ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார். நட்பின் அடிப்படையில் தனது குடும்ப செலவிற்காக கணேசன், ராபர்ட் இங்கர்சாலிடம 2021 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ. 3 லட்சம் ரொக்கம் பெற்றிருந்தார்.

ஆனால் பலமாதங்கள் ஆகியும் கணேசன், ராபர்ட் இங்கர்சாலிடம் பணத்தை திருப்பி தரவில்லை. இதுதொடர்பாக ராபர்ட் இங்கர்சால் கணேசனிடம், முறையிட்டபோது, தனது சேமிப்புகணக்கில் இருந்து ரூ. 3லட்சத்திற்கு காசோலையை ராபர்ட் இங்கர்சாலுக்கு கணேசன் கொடுத்தார்.

அந்த காசோலையை ராபர்ட் இங்கர்சால் தனது வங்கி கணக்குமூலம் செலுத்தியபோது 30. 9. 2022 அன்று காசோலை திரும்பி வந்துவிட்டது. இதுதொடர்பாக கணேசனிடம் பலமுறை முறையிட்டும், காசோலைக்குரிய பணத்தை திருப்பி தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ராபர்ட் இங்கர்சால், பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்புலட்சுமி, ஆசிரியர் கணேசன், மனுதாரர் இங்கர்சாலுக்கு, இழப்பீட்டு தொகையாக ரூ. 3லட்சத்தை தீர்ப்பு கூறிய தேதியில் இருந்து 2 மாதத்திற்குள் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் 6மாதம் சிறைதண்டணை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்

தொடர்புடைய செய்தி