அரியலூர் மாவட்டத்தில் செங்கரும்புகள் தயார்

2303பார்த்தது
அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கரும்புகள் பயிரிடப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளன. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கரும்பு தான். புதுமணத் தம்பதிகளும், பெண் வீட்டிலிருந்து பொங்கல் பண்டிகையொட்டி பொங்கல் படியாக சீர் வரிசை பொருட்களுடன் சேர்த்து கரும்புகளை கட்டு கட்டாக வாங்கி கொடுப்பார்கள். இதனால் பொங்கல் பண்டிகை கணக்கிட்டு சுமார் 10 மாதங்களுக்கு முன்பே கரும்பு சாகுபடி விவசாயிகள் தொடங்கி விடுவார்கள்.

பொங்கல் பண்டிகையில் சிறப்பிடமாக வைக்கக்கூடிய செங்கரும்புகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இப்படி சிறப்பு வாய்ந்த செங்கரும்புகள் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய பகுதிகளில் பரவலாக பயிரிடப்பட்டு தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. தமிழக அரசு இந்த ஆண்டும் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரேஷன் கடை மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். மேலும் கூடுதல் விலைக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி