+2 பொதுத்தேர்வு: அரியலூர் மாணவர்கள் சாதனை: 97. 25% தேர்ச்சி

73பார்த்தது
+2 பொதுத்தேர்வு: அரியலூர் மாணவர்கள் சாதனை: 97. 25% தேர்ச்சி
பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் அரியலூர் மாவட்டம் மூன்றாம் இடம். 97. 25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி.

அரியலூர் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் 3917 மாணவர்களும், 4301 மாணவிகளும் சேர்த்து மொத்தம் 8, 218 பேர் தேர்வு எழுதினர். இன்று வெளியான முடிவுகளில் 3770 மாணவர்களும் 4222 மாணவிகளும் சேர்த்து 7992 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 96. 25 சதவீதமும் மாணவிகள் 98. 16 சதவீதமும் சேர்த்து அரியலூர் மாவட்டத்தில் 97. 25 சதவீத மானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டம் 97. 45% தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது; 97. 42% தேர்ச்சி பெற்று ஈரோடு, சிவகங்கை மாவட்டங்கள் 2-ம் இடம் பெற்றுள்ளது; 97. 25% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் 3-ம் இடம் பிடித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி