ராஜஸ்தான்: பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு சென்ற பெண்ணின் வயிற்றுக்குள் மருத்துவர்கள் துண்டை (Towel) வைத்து தைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 மாதங்களாக வயிற்று வலியால் அவதியுற்றதால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது இந்த உண்மை தெரியவந்துள்ளது. வலியை போக்க அவர் உட்கொண்ட வலி நிவாரணி மருந்துகளும் உடல் உறுப்பை பாதித்துள்ளன. தற்போது அறுவை சிகிச்சை மூலம் துண்டு அகற்றப்பட்டு அவர் நலமுடன் உள்ளார்.