எதிர்க்கட்சிகளின் மற்றொரு பெயர் ஊழல்

58பார்த்தது
எதிர்க்கட்சிகளின் மற்றொரு பெயர் ஊழல்
பீகாரின் கயா நகரில் நடந்த பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் 2-வது பெயர் ஊழல் ஆகும். பீகாரின் இந்த மோசமடைந்த நிலைமைக்கு அக்கட்சியே காரணம் என கூறியுள்ளார். மேலும், பீகாரில் காட்டாட்சியின் பெரிய உருவம் ஆக ஆர்.ஜே.டி. உள்ளது. மேலும் அவர்கள் பீகாருக்கு இரண்டு விசயங்களை தந்துள்ளனர். ஒன்று காட்டாட்சி. மற்றொன்று, ஊழல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் போன்றவை ஒரு தொழிலாகவே நடந்தன. பெண்கள் இரவில் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சமடைந்தனர் என கூறியுள்ளார்.