தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகை கஸ்தூரி தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை எழும்பூர் போலீசார் சம்மன் அளிக்க வீட்டுக்கு சென்ற நிலையில், அவர் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது. அவரது மொபைல் எண்ணும் ஆப் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு தெலுங்கு அமைப்பினர், திக, திமுக உள்ளிட்ட கட்சியினரும் கஸ்தூரிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.