சின்ராசாக மாறிய நடிகர் சரத்குமார்

72பார்த்தது
சின்ராசாக மாறிய நடிகர் சரத்குமார்
விருதுநகர் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் சுற்றிச் சுழன்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். பிரச்சார வாகனத்தில் நின்றவாறு மைக் பிடித்து ஆதரவு கேட்கும் வழக்கமான நடைமுறையைக் கடைபிடித்து வருகிறார்கள். இவர்களில் இருந்து தன்னை மாறுபடுத்து காட்டி வருகிறார் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார். சூர்யவம்சம் சினிமாவில் சின்ராசு, தன்னுடைய காதலியை பைக்கில் அழைத்துச் செல்வார். இந்தத் தேர்தல் களத்தில் நிஜத்திலும், தன் மனைவி ராதிகாவை பைக்கிலேயே பிரச்சாரத்துக்கு அழைத்துச் செல்கிறார் சரத்குமார். திரை பிரபலங்கள் என்பதை தாண்டி சாதாரண மனிதர்களை போல் சாலையில் பைக் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி