கேதர்நாத்தில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

74பார்த்தது
கேதர்நாத்தில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
நடிகர் ரஜினிகாந்த், ஒவ்வொரு முறை படப்பிடிப்பு முடிந்தவுடன் இமயமலைக்குச் சென்று வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது வேட்டையன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அவர் இமயமலைக்குச் சென்று வழிபாடு செய்து வருகிறார். இந்த நிலையில், இன்று (மே 31) உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத், பத்ரிநாத்தில் உள்ள கோயில்களில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி