10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்த இளம்பெண்

399284பார்த்தது
பிரசவத்துக்கு பின்னர், சில தாய்மார்களுக்கு பால் சுரக்காத நிலை ஏற்படுகிறது. இதற்காக அரசு தாய்ப்பால் வங்கி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுபற்றி பலர் அறிந்திருந்தாலும், தாய்மார்கள் சிலர் தானம் அளிக்க முன்வருவதில்லை. குழந்தைகளின் உயிர் காக்கும் வகையில், கோவை வடவள்ளி பி.என்.புதூரைச் சேர்ந்த ஸ்ரீவித்யா(27) என்பவர் கடந்த 10 மாதங்களாக, அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்காக தாய்ப்பால் தானம் செய்து வருகிறார். தற்போது 10 மாத காலத்தில் 135 லிட்டருக்கு மேல் தாய்ப்பால் தானம் செய்துள்ளார். தினமும் தனது குழந்தைக்கு அளித்தது போக, மீதம் உள்ள தாய்ப்பாலை சேகரித்து மருத்துவமனை மூலம் குழந்தைகளுக்கு அளிக்கிறார். 'இந்தியன் புக் ஆப் அன்ட் ஆசியன் புக் ரெக்கார்ட்ஸ்' சார்பில் இவரை பாராட்டி சான்றிதழும், விருதும் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி