இறந்த மனைவிக்காக கணவன் கட்டிய கோவில்

554பார்த்தது
இறந்த மனைவிக்காக கணவன் கட்டிய கோவில்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் திருப்பூரில்
பனியன் கம்பெனி வைத்துள்ளார். இவருக்கு 2009ஆம் ஆண்டு கற்பகவள்ளி என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கற்பகவள்ளி கடந்த ஆண்டு உயிரிழந்துவிட்டார். முன்னதாக நீ என்னை விட்டு பிரிந்துவிட்டால் உனக்காக நான் கோவில் காட்டுவேன் என தன் மனைவியிடம் அவர் கூறியுள்ளார். கூறியபடியே மனைவியை புதைத்த இடத்தில் கோவில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி