பிரபல நடிகர் தற்கொலை செய்த வீட்டில் குடியேறும் தமிழ் நடிகை

64பார்த்தது
பிரபல நடிகர் தற்கொலை செய்த வீட்டில் குடியேறும் தமிழ் நடிகை
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தோனி (M.S. Dhoni: The Untold Story ) படத்தில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் இருக்கும் தன் வீட்டில் 2020-ல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது அவர் வசித்த அபார்ட்மென்ட்டில் குடியேறியிருக்கிறார் நடிகை அதா சர்மா. இவர் தமிழில் சார்லி சாப்ளின் 2, இது நம்ம ஆளு படங்களில் நடித்தவர்.

அவர் கூறுகையில், “நான் பிரைவசியை விரும்புபவள். என் வாழ்க்கையின் சில விஷயங்களை மட்டுமே சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறேன். இனியும் அப்படித் தான். எனக்கு எது சவுகரியமோ அதை தான் ஷேர் செய்வேன். என் வீட்டிற்கு நிறைய பறவைகள், அணில்கள் வருகின்றன. அவைகள் மட்டும் என் பிரைவசியை தாண்டி வர அனுமதி உண்டு” என்றார்.

தொடர்புடைய செய்தி