பாம்பு என்றால் படையும் நடுங்கும் என சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் பாம்பு என்ற பெயரைக் கேட்டதும் நம் மனதில் பயமும் நடுக்கமும் ஏற்படும் என சொன்னால் மிகையாகாது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள கணுவாய் அருகே நேற்று (ஜன. 01) இரவு நேரத்தில் சாலையைக் கடந்து மலைப்பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து சென்றது. இதை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் திகைப்புடன் பார்த்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.