விவசாயிகளை தடுக்க சாலையில் ஆணி

56பார்த்தது
விவசாயிகளை தடுக்க சாலையில் ஆணி
டெல்லிக்குள் நுழைந்து போராட்டம் நடத்தவுள்ளதாக பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேச விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், அவர்களை டெல்லிக்குள் நுழையாமல் தடுக்க ஆங்காங்கே சாலைகளில் ஆணி அடித்தும், தடுப்புகளை ஏற்படுத்தியும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 20 ஆயிரம் விவசாயிகள் 2 ஆயிரம் ட்ராக்டர்களில் டெல்லிக்குள் நுழைந்து போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

தொடர்புடைய செய்தி