பாஜக கொடியை கொளுத்திய பாமக நிர்வாகி

69பார்த்தது
பாஜக கொடியை கொளுத்திய பாமக நிர்வாகி
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நான் பாமகவில் 12 ஆண்டுகளாக இருக்கிறேன். மேலும் மாவட்ட இளைஞரணி செயலாளராகவும் இருந்தேன். எங்களது பஞ்சாயத்தில் 65% பாமகவினர் ஓட்டுதான் உள்ளது. ஆனால் பாஜகவினர் எங்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயலாற்றி வருகின்றனர். பாஜகவில் ஒன்னு ரெண்டு பேர்தான் உள்ளனர். அதனால் எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறி பாஜக கொடியை தீயிட்டு கொளுத்தியுள்ளார். பின்னர் கட்சியினர் அழுத்தம் காரணமாக அந்த வீடியோவை டெலிட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி