பராமரித்து வந்த யானை குட்டி திடீர் உயிரிழப்பு

84பார்த்தது
பராமரித்து வந்த யானை குட்டி திடீர் உயிரிழப்பு
கோவை: மருதமலை அருகே கடந்த மே மாதம் 30ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்து கிடந்தது. இதனை வனத்துறையினர் ஐந்து நாட்கள் சிகிச்சை அளித்து வனபகுதிக்குள் விடுவித்தனர். இந்நிலையில் அந்த பெண் யானையுடன் இருந்த 3 மாத யானை குட்டி தாயிடம் இருந்து பிரிந்து வேறொரு யானை கூட்டத்துடன் சேர்ந்து காட்டுக்குள் சென்றது.

இதனிடையே மீண்டும் கூட்டத்தை விட்டு பிரிந்து தனியாக யானைகுட்டி சுற்றி திரிந்தது. இதனை தொடர்ந்து வனத் துறையினர் யானை குட்டியை மீட்டு தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வனத் துறையின் முயற்சி தோல்வி அடைந்ததால் கடந்த ஜூன் 9ஆம் தேதி உதகை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு யானை குட்டியை கொண்டு சென்று பராமரித்து வந்தனர். இந்நிலையில் யானை குட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்து விட்டதாக வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி