12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

2562பார்த்தது
12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை
உத்தர பிரதேச மாநிலம் குஷி நகரில் 12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குஷிநகரில் உள்ள தாராயசுஜன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றின் அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் 12 வயது சிறுமியின் சடலம் சந்தேகத்திற்கிடமான நிலையில் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அரை நிர்வாணமாக காணப்பட்ட சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தன. பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.