ரூ.9,000 கோடி வரவு வைத்த விவகாரம்.. டிஎம்பி வங்கி சிஇஓ ராஜினாமா

51478பார்த்தது
ரூ.9,000 கோடி வரவு வைத்த விவகாரம்.. டிஎம்பி வங்கி சிஇஓ ராஜினாமா
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ராஜ்குமார் என்ற டாக்சி ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் இருந்து ரூ.9,000 கோடி டெபாசிட் செய்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், ராஜ்குமார் வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ.9,000 கோடியை செலுத்தியதாகவும், பின்னர் பணத்தை வங்கி திரும்ப பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வங்கி இயக்குநர்கள் குழு கூட்டத்திற்கு பிறகு இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு எழுதிய கடித்தில் சொந்த காரணங்களுக்காக அந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள கிருஷ்ணன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி