58 தொகுதிகளுக்கு நாளை 6ஆம் கட்ட தேர்தல்

60பார்த்தது
58 தொகுதிகளுக்கு நாளை 6ஆம் கட்ட தேர்தல்
மக்களவைத் தேர்தலின் ஆறாவது கட்டத்தின் ஒரு பகுதியாக, 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு நாளை (மே 25) சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 14, ஹரியானாவில் 10, பீகாரில் 8, மேற்குவங்கத்தில் 8, டெல்லியில் 7, ஒடிசாவில் 6, ஜார்கண்டில் 4 மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இதுவரை 25 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 428 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. ஏழாம் கட்ட தேர்தல் வரும் ஜுன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி